--- --:--:-- --

கண்டெய்னர் பெட்டியை நகர்த்தும் போது தலையில் விழுந்து தொழிலாளி பலி..!

7

தூத்துக்குடியில் கிரேன் உதவியுடன் கண்டெய்னர் பெட்டியை நகர்த்தும் போது எதிர்பாராதவிதமாக தொழிலாளியின் மேல் விழுந்து ஒருவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சாலையோரத்தில் இருந்த கட்டடவேலை பொருட்கள் அடங்கிய கண்டெய்னர் பெட்டியை வேறு இடத்தில் நகர்த்தும் பணியில் தொழிலாளர்கள் காமாட்சி நாதன், ஓட்டுனரின் பாதுஷா ஆகியோர் ஈடுபட்டனர்.

 

கண்டெய்னரை நகர்த்தும் போது கிரேன் எதிர்பாராதவிதமாக மேலே சென்று உயர் அழுத்த மின்கம்பியில் பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த ஓட்டுனர் கண்டெய்னரை விடுவிக்கும் கியரை இயக்கியதால் கீழே இருந்த காமாட்சி நாதன் மீது விழுந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இதில் படுகாயமடைந்த ஜோயல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Right Menu Icon