--- --:--:-- --

உறவினர்கள் அறிவுரை கூறியதால் பெண் மருத்துவர் தற்கொலை..!

3

திருச்சியில் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருச்சி சுப்பிரமணியபுரத்தில் சேர்ந்தவர் கோவிந்தராஜன். பிரபல மருத்துவரான இவரின் பேத்தி சஞ்சனி. 31 வயதான இவர் குழந்தைகள் நல மருத்துவராக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.

 

மேலும் தன் வீட்டின் அருகே கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கோகுல் என்பவருடன் திருமணம் ஆன நிலையில் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்தனர்.

 

இதனையடுத்து தன் குழந்தைக்கு சஞ்சினி காதணி விழாவை ஏற்பாடு செய்திருந்தார். விழாவுக்கு வந்த உறவினர்கள் கணவர் எங்கே என கேட்டதோடு அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது, இதனால் விரக்தி அடைந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆனதால் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon