ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த மூதாட்டி..!
மகாராஷ்டிராவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். ஹைதராபாத்திற்கு கணவருடன் சென்ற அந்த மூதாட்டி ரயில் நிலையத்தில் தேனீர் அருந்த நின்றார்.
ரயில் புறப்பட்டதால் பதற்றமடைந்த அவர் வேகமாக ஏற முயன்றபோது அந்த பாலத்திற்கும் நடைபாதைக்கும் இடையே தடுமாறி விழுந்தார். சக பயணிகளும் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டுள்ளனர். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






