--- --:--:-- --

நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி 10 கோடி ரூபாய்க்கு ஏலம்..!

1

மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுகள் ஏலம் விடப்படும் நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி 10 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு உள்ளன.

 

அக்டோபர் 7ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் பிரதமருக்கு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர்கள் அளித்த ஈட்டி, பாக்ஸிங் கிளவுஸ் மற்றும் அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி வடிவம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

 

பொதுமக்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக ஏலம் தொடங்கியிருக்கும் நிலையில் நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி 10 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon