--- --:--:-- --

தமிழகத்தில் நாளை நடைபெறும் கொரொனா தடுப்பூசி முகாம்..!

6

மிழகத்தில் நாளையும் கொரொனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நடைபெறும் இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமில் 50 லட்சம் பேருக்கு செலுத்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

கடந்தமுறை மருந்துகள் தீர்ந்துவிட்ட மையங்களில் தற்போது கூடுதலாக மருந்துகள் வழங்க பட்டுள்ளதாக மருத்துவத் துறை கூறியுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை முகாம் நடைபெறும் நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் 1600 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

 

முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சியின் இணைய தளம் அல்லது மாநகராட்சி தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். சென்னையில் கடந்த முறை மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த முறை தடுப்பூசி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில் பல இடங்களில் பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல இந்த முறை திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தடுப்பூசி செலுத்துவோருக்கு குலுக்கல் முறையில் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon