பள்ளி மாணவர்கள் இருவரின் வங்கி கணக்கில் 906 கோடி ரூபாய் வரவு..!
குடிபோதையில் பள்ளி மாணவர்களின் இருவரின் வங்கி கணக்கில் 900 கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆறாம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் வங்கி கணக்கில் 6 கோடி, மற்றொரு மாணவரின் வங்கி கணக்கில் 900 கோடி ரூபாயில் நிரம்பியிருந்தது ஏடிஎம்மில் பணம் எடுத்தபோது தெரியவந்தது.
தகவல் பரவியதும் அந்த ஊரில் வங்கியில் கணக்கு வைத்திருந்த அனைவரும் தங்களுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் வந்துள்ளதா என்பதை அறிய ஏடிஎம்முக்கு சென்றனர். அதிக தொகை இருப்பது உண்மைதானா என மாணவர்களின் பெற்றோர் இணையதள மையத்துக்குச் சென்று பார்த்து உறுதி செய்து கொண்டுள்ளனர்.
மறுநாள் வங்கி திறந்ததும் மேலாளரிடம் விசாரித்தபோது கணினி அமைப்பில் தவறுதலாக வரவு வைக்கப் பட்டுள்ளதாகவும் பெரும் தொகை இருப்பு உள்ளதாக காட்டும் அதே நேரத்தில் உண்மையிலேயே அவர்களின் கணக்கில் பணம் இல்லை என்றும் விளக்கமளித்தார்.






