--- --:--:-- --

இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை..!

7

டெல்லியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பட்டாசு மத்தாப்புகளால் காற்று மாசு அதிகரிக்கும் என்பதால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு தீபாவளிக்கு டெல்லி மாநில எல்லைக்குள் பட்டாசுகளை சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

இதன்மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பட்டாசுக்கு தடை டை கடைசி கட்டத்தில் விதிக்கப்பட்டதால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கொள்முதல் செய்வதை தவிர்க்க முடியும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon