மேடையிலேயே அதிகாரியை சஸ்பண்ட் செய்த முதல்வர்..!
மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் மந்தமாக செயல்பட்டதாக அதிகாரியை பணி இடைநீக்கம் செய்தார். அரசு நிகழ்ச்சியில் சிவராஜ் சிங் சவுகான் உரையாற்றினார்.
அப்பொழுது கூட்டத்தில் இருந்தவர்கள் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளின் ஒருவரை பற்றி சரமாரியாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறையிலடைக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.






