பெண்கள் கருக்கலைப்பு செய்வது குற்றமாகாது..!
மெக்சிகோவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது குற்றமாகாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் செய்தனர். உச்ச நீதிமன்ற வளாகம் முன்பு திரண்ட அடிப்படைவாதிகள் மற்றும் சில மதகுருக்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பு கத்தோலிக்க தேவாலயத்தின் முறைக்கு எதிரானது எனக்கூறி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
மெக்சிகோவில் கருக்கலைப்பு செய்துகொண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்களில் பல பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பெண்கள் மற்றும் மனிதநேய அமைப்புகள் வரவேற்றுள்ளனர்.






