மலையாள வில்லன் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்..!
மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான ரிஷபாவா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் இவர்.
கடந்த 1990ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
கடந்த 2010ஆம் ஆண்டு அவருக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த அவர் நேற்று காலமானார்.






