படகைத் தள்ளும் ராட்சத திமிங்கலத்தின் வீடியோ..!
ராட்சத திமிங்கலம் ஒன்று படகைத் தள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அண்மையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. டிரோன் கேமரா மூலம் இதனை படமாக்கியுள்ளார்.
அந்த வீடியோவில் அர்ஜென்டினா நாட்டின் கடலில் பெண் ஒருவர் துடுப்பு படகில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்க அதிர்ச்சியூட்டும் விதமாக அங்கு வந்த திமிங்கலம் அந்த படகை தனது துடுப்பால் தள்ளி உதவி செய்கிறது.
இந்த ஆனந்தக் காட்சி தற்போது நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அர்ஜென்டினாவை பொறுத்தவரை மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை திமிங்கலங்கள் இடம்பெயர்ந்து செல்லும். அந்த தருணங்களில் அவை கடற்கரையோரம் வந்து செல்லும்.






