இறகுப்பந்து விளையாடிய மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இறகு பந்து விளையாடினர். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் இறகுப்பந்து, விளையாட்டு கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் சிறிது நேரம் இறகுபந்து விளையாடியுள்ளார்.






