--- --:--:-- --

7 ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி பலி..!

6

திருவண்ணாமலையில் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி ரோட்டில் உள்ள உணவகத்தில் சிலர் உணவருந்தி உள்ளனர். அவர்களில் 12 பேருக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து 12 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் சிகிச்சை பலனின்றி 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஹோட்டல் உரிமையாளரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளனர். இது அனைவரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon