பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது வெடிவிபத்து..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வீடு ஒன்றில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் உரிய அனுமதி பெறாமலும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. காலை ஊழியர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன.
இதில் உரிமையாளர் பாலமுருகன் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். வீட்டின் மேற்கூரை முற்றாக எரிந்து ஒரு பகுதி சுவரும் இடிந்து விழுந்தது. காயமடைந்த 8 பேரில் 52 வயதான சண்முகராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.






