தமிழகத்தில் இந்த ஆண்டு 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்..!
தமிழகத்தில் இந்த ஆண்டு 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட இருப்பதாக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். கிணத்துக்கடவு தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி நேரத்தின்போது கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி கிணத்துக்கடவு பகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார். மேலும் உயர்கல்வித்துறை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தலா 10 கல்லூரிகள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் ஒரு கல்லூரி என மொத்தம் இருபத்தி ஒரு கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட இருப்பதாக கூறினார்.
25 சதவீத மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் அதிகம் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கல்லூரி அமைப்பதற்கு மாநகராட்சி என்றால் 2 ஏக்கர் நிலமும், நகராட்சி என்றால் 3 ஏக்கர் நிலமும், கிராம பஞ்பஞ்சாயத்து நிலம் என்றால் ஐந்து ஏக்கர் நிலமும் தேவை என்று அமைச்சர் அப்போது குறிப்பிட்டார்.






