--- --:--:-- --

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த மனைவி

8

நாமக்கலில் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஏ எஸ் பேட்டையை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மதுவுக்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் தினசரி குடித்து விட்டு வந்து மனைவி செல்வராணியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி இரவு உணவுக்காக செல்வராணி பூரி தயார் செய்து கொண்டிருந்தபொழுது வழக்கம்போல குடிபோதையில் வந்த தங்கராஜ் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை எடுத்து தங்கராஜ் மீது கூறியுள்ளார்கூட்டி ஊற்றியுள்ளார். இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி செல்வராணி கைது செய்யப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon