--- --:--:-- --

பரிகார பூஜை நடத்துவதாக கூறி ஏமாற்றிய அண்டா சாமியார்..!

2

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பரிகார பூஜை நடத்துவதாக கூறி பெண்ணிடம் நகை பணம் பறித்த சாமியார் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த சக்தி என்பவர் காவி உடை அணிந்து பலவித பூஜைகள் நடத்தி ஜோதிடம் சொல்லி வந்துள்ளார்.

 

வட்டவடிவில் கோடுகள் போட்டு பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அதில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து வந்ததால் அவரை அண்டா சாமியார் என அந்த பகுதி மக்கள் அழைத்துள்ளனர்.

 

இந்த நிலையில் பேச்சியம்மாள் என்பவரிடம் வீட்டை இடித்து மாற்றி அமைத்தால்தான் கணவர் ஆத்மா சாந்தி அடையும் எனவும் தனது குடும்ப பிரச்சினை தீரும் எனவும் கூறியுள்ளார்.

 

வீட்டை இடிக்கும் பிரச்சனை தீராமல் போகவே சிறப்பு பரிகார பூஜை செய்வதாக கூறி தங்களிடம் நகை மற்றும் பணத்தை ஏமாற்றியதாக தெரிகிறது.

 

நகை, பணத்தை திருப்பி கேட்டபோது செய்வினை வைத்து கைகால்களை விளங்காமல் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இந்நிலையில் தங்க பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அந்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon