--- --:--:-- --

தாலிபனுக்கு ஆதரவாக செயல்படும் சீனா..!

2

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் தூதரகங்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மற்ற பிற நாடுகள் மாற்ற பரிசீலிக்கும் வேளையில் சீனா மட்டும் காபூலில் தனது தூதரகத்தை திறந்து வைத்திருக்க உறுதியளித்துள்ளது.

 

கடந்த ஜூலை மாதம் சீனாவில் வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடந்தது. ஆப்கனில் முக்கியமான அரசியல் மற்றும் ராணுவ இயக்கம் என்று தாலிபனை அழைத்த சீனா ஆப்கன் அரசு வீழ்ந்த பிறகு தாலிபான் உடன் முக்கிய கூட்டாளியாக மாறியுள்ளது.

 

மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கும் சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது, புதிய தாலிபன் அரசு தீவிரவாத குழுக்கள் உடனான உறவை கைவிட வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon