மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கக் கூடாது..!
மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கக் கூடாது என பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இனி கோவில்களில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் அதற்கான கட்டணத்தை அந்த பணியில் ஈடுபட்டவருக்கு திருக்கோவில் நிர்வாகமே வழங்கும் என்று தெரிவித்துள்ளார். சமய அறநிலையத் துறை சார்பாக கிட்டதட்ட 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
மண மக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கோவில்களில் நடைபெறும் திருமணத்திற்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.






