ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து கங்கனா ரனாவத் மரியாதை..!
வரும் 10ஆம் நாள் தலைவி படம் வெளியாக உள்ள நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா ரனாவத் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கியுள்ள படம் தலைவி. கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த்சாமி எம்ஜிஆர்ராகவும் நடிக்கின்றனர். இந்த படம் வரும் 10 ஆம் நாள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா ரனாவத், விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





