போதைப்பொருள் தொடர்பான வழக்கில் ரகுல்பிரீத் சிங் இன்று நேரில் ஆஜரானார்..!
போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகைகள் சார்மி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராகினர். போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனை நடத்தினர்.
இதில் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் நடிகைகள் சார்மி, ரகுல்பிரீத் சிங் உட்பட 12 பேருக்கு போதைபொருள் பயன்படுத்தியதில் தொடர்புடையதாக தெரியவந்தது. இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் நடிகைகள் ராகுல் ப்ரீத் சிங், இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நடிகை சார்மி அமலாக்கத்துறை முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகை ராகுல் பிரித் சிங் இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.






