--- --:--:-- --

விருதுநகரில் மது பாட்டிலில் இறந்துகிடந்த பல்லி..!

9

விருதுநகர் அருகே அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜபாண்டி.

 

இவர் உறவினர்கள் வீட்டில் நிகழ்ச்சிக்காக திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மலையன்குளம் சென்றுவிட்டு பின்பு அங்குள்ள அரசு மதுபானக் கடையில் மது பாட்டில் வாங்கியுள்ளார்.

 

அந்த மது பாட்டிலில் பெட்டியை உடைத்து பார்த்தபோது பாட்டில் உள்ளே பல்லி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon