கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம்..!
கன்னியாகுமரியில் வயது மூப்பு காரணமாக கணவரை இழந்து அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார். நயினார் முகமது மாவட்ட அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் இருக்கின்றனர்.
தனது மூத்த மகன் வீட்டில் தம்பதிகள் இருவரும் வசித்து வந்த நிலையில் நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்வதற்கான இறுதி சடங்கு நடந்த நிலையில் முகம்மதுவின் முகத்தை இறுதியாக பார்த்த சுவைதா மயங்கி விழுந்தார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுவேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதிப்படுத்தினர். வயது முதிர்ந்த நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




