--- --:--:-- --

குதிரை பலியான விவகாரத்தில் இயக்குனர்  மணிரத்னம் மீது வழக்குப்பதிவு..!

6

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை பலியான விவகாரத்தில் இயக்குனர்  மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

 

போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால் குதிரை உள்ளிட்ட சில விலங்குகளை அதற்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் 80க்கும் மேற்பட்ட குதிரைகள் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் கடந்த 11ஆம் தேதி ஒரு குதிரை பலியானதாக சொல்லப்படுகிறது.

 

இதனையடுத்து இந்திய விலங்குகள் நல வாரியம் விசாரணை நடத்துமாறு ஹைதராபாத் மாவட்ட ஆட்சியருக்கு தெலுங்கானா விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதி இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிரத்தினம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக குதிரை தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோ அனுப்பினால் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon