--- --:--:-- --

கடலூரில் இடி தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு..!

7

கடலூரில் வயலில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் இரண்டு பேர் இடி தாக்கி உயிரிழந்தனர். கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

 

இந்தநிலையில் சிதம்பரம் அருகே மொகையூர் கிராமத்தை சேர்ந்த பாலதண்டாயுதம் வயலில் நெல்விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி தாக்கியதில் பாலதண்டாயுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இதேபோன்று புவனகிரி அருகே பிரசன்ன ராமாபுரம் பகுதியில் உழவுப் பணியை மேற்கொண்டிருந்த கலைச்செல்வன் என்பவரும் தலையில் இடி விழுந்து உயிரிழந்தார். மழையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்த கலைச்செல்வன் இடி தாக்கி பலியானார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon