--- --:--:-- --

கராத்தே ஆசிரியரின் ஊக்கத்தால் வெற்றி பெற்ற சிறுவன்..! வைரல் வீடியோ..!

5

குழந்தைகளின் பழக்கவழக்கங்கள், தனித்துவம் போன்ற செயல்பாடுகளில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோர்களுக்கு அடுத்த படியாக குழந்தைகளின் செயல்களில் தாக்கங்கள் ஏற்படுத்துவது ஆசிரியர்கள்.

 

ஆசிரியர்கள் அளிக்கும் ஊக்கமும் ஆதரவும் பெரும்பாலான மாணவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் தோல்வியால் துவண்டு போன மாணவனை உற்சாகப்படுத்தி ஆசிரியர் வெற்றி பெறச் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவில் ஒரு கடினமான பொருளை இரண்டாக உடைக்கும் படி கராத்தே பயிற்சியாளர் சிறுவனுக்கு இலக்கை நிர்ணயித்து உள்ளார். அந்த பொருளை ஓரிருமுறை காலால் அந்த சிறுவன் உடைக்க முயன்றான். ஆனால் அந்த பொருளை உடைக்க இயலவில்லை.

 

தன்னுடைய முயற்சி வெற்றியில் முடியாததால் அந்த சிறுவன் அழ ஆரம்பிக்கிறான். ஆனால் அந்த சிறுவனை கடத்திய ஆசிரியர் அப்படியே விட்டுவிடவில்லை. தொடர்ந்து அந்த சிறுவனை ஊக்கப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட இடத்தை வெற்றிகரமாக அடைய வைக்கிறார்.

 

ஆசிரியர் அந்த சிறுவனை ஊக்கப்படுத்தும் பொழுது சுற்றியிருக்கும் சிறுவர்களும் அந்த சிறுவனுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் சத்தமிடுகின்றனர். மாணவர்களின் வெற்றியில் ஆசிரியரின் பங்கு எந்த வகையில் உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon