ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல் தேனி கொண்டு செல்லப்படுகிறது..!
மாரடைப்பால் உயிரிழந்த ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில் ஓபிஎஸ் மனைவி உயிரிழந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சின் மனைவி விஜயலட்சுமிக்கு 66 வயது. உடல்நலக் குறைவாக கடந்த 10 நாட்களாக அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பு காரணமாக ஓபிஎஸ் மனைவி உயிரிழந்தார். அவரது உடல் தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.






