நடிகர் மம்முட்டி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!
தனக்கு சொந்தமான பட்டா நிலத்தை க புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கள்ளம்பலம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.






