--- --:--:-- --

ஒரு பாட்டில் தண்ணீர் 3 ஆயிரம் ரூபாய்..! ஒரு தட்டு உணவு 7 ஆயிரம் ரூபாய்..!

5

காபூல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் குடிதண்ணீர் 3000 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய நேரத்தில் அந்நாட்டு மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

 

பலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் காபூல் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கும் போது மக்கள் குடி தண்ணீர் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அங்கு ஒரு பாட்டில் தண்ணீர் இந்திய மதிப்பில் 3000 ரூபாய்க்கு ஒரு தட்டு 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon