--- --:--:-- --

முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை..!

9

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டிணத்தில் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

குடிசைத் தொழில் செய்து வரும் ஜெகநாதன் பிரியதர்ஷினி தம்பதியின் மகளுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அரிய வகை முதுகு தண்டுவட தசைநார் சிதைவு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

 

இந்த பாதிப்பிற்கு அமெரிக்காவில் தயாராகும் ஒரே ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய வகையிலான 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை செலுத்த வேண்டும் என்ற நிலையில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மத்திய மாநில அரசுகள் உதவிபுரிய பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon