வெறிநாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு..!
சென்னை பூந்தமல்லியில் வெறிநாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
சாலையில் சென்று கொண்டிருந்த சிறுவன் உட்பட 5 க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்ததில் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் ஆனால் சில நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுவன் ஆய்வு வாயிலிருந்து எச்சில் ஊறியது.
தண்ணியை கண்டால் தப்பித்து ஓடுவது உள்ளிட்ட சுபாவங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில் ரேபிஎஸ் நோயின் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் கடந்த ஒரு மாத காலமாக உரிய சிகிச்சை அளித்து வந்த போது பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தான்.






