--- --:--:-- --

விவாகரத்து குறித்த கேள்விக்கு சமந்தாவின் பதில் என்ன..?

3

சமந்தா, நாக சைதன்யா தங்களது விவாகரத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்துள்ளனர். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

 

திருமணத்திற்கு பிறகும் நடிகைகள் நடித்து மாஸ் காட்டலாம் என துவக்கி வைத்த சமந்தா தனது கணவரது குடும்ப பெயரை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

 

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து நிகழுமோ எனக் கூறப்பட்ட நிலையில் கோவாவில் இருவரும் சிறந்த கலைஞர்களை கொண்டு பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வதந்திகளை காதில் வாங்காமல் மகிழ்ச்சியாக வாழ்வதில் இருவரும் மும்முரம் காட்டி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon