மொபைல கேம் விளையாடிட்டே இருக்கான் சார்..! தனது அண்ணனை ஆசிரியரிடம் மாட்டிக் கொடுத்த சிறுமி..!
படிக்காமல் எப்போதும் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் தனது அண்ணனை நன்றாக அடித்து படிக்கசொல்லிக் கொடுக்குமாறு ஆசிரியர்களிடம் கூறும் சிறுவயது தங்கையின் அதட்டலான வீடியோ தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
பொதுவாக பிள்ளைகள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களின் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் சென்று முறையிடுவது வழக்கம். ஆனால் வீடியோவில் இருக்கும் காட்சிகள் முற்றிலும் அதற்கு மாறாக உள்ளது. தாய் சற்று தள்ளி நிற்க அண்ணனுடன் ஆசிரியர்களுடன் வந்து நின்று சிறுமி தனது அண்ணன் எப்பொழுதும் கேம் விளையாடிக் கொண்டே இருக்கிறான்.
வீட்டில் படிக்க மாட்டேன்கிறான் என்று மழலை மொழியில் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனால் நன்றாக அடித்து சொல்லிக் கொடுங்கள் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்று மழலை மொழியில் அந்த சிறுமி கூறியுள்ளார்.






