மீரா மிதுன் ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கு 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
நடிகை மீரா மிதுன் ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கு 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கேரளாவின் ஆலப்புழாவில் அவருடைய ஆண் நண்பருடன் சேர்த்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் முன்ஜாமீன் கோரிய வழக்கு கடந்த 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







