இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி வினியோகம்..!
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி வினியோகத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரொனா கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் புனேயில் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து சந்தையிட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியில் போலி தடுப்பூசிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் போலித் தயாரிப்புகள் தொடர்பாக கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தெரிவிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. போலியான தடுப்பூசிகள் உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நோயாளிகளுக்கு கெடுதல் ஏற்படுவதை தடுக்க இந்த தவறான தயாரிப்புகளை புழக்கத்தில் இருந்து கண்டறிந்து அகற்றுவது முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







