முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.செங்குட்டுவன் உடல்நலக்குறைவால் காலமானார்..!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞர் பா செங்குட்டுவன் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2014 முதல் 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அதிமுகவின் வழக்கறிஞர் செங்குட்டுவன்.
கடந்த சில ஆண்டுகளாக கட்சி பணியிலிருந்து விலகி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஒரு வார காலமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் செங்குட்டுவன்.
இவர்கள் காட்பாடி திருநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பா செங்குட்டுவன் புத்தகம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







