--- --:--:-- --

வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிபோதையில் தகராறு செய்த அதிமுக பிரமுகரின் தம்பி..!

2

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிபோதையில் உள்ள ஒருவர் ஊழியர்களுடன் அட்டகாசம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் சென்ற ஒருவர் இந்த ஊருக்கு எம்எல்ஏ கண்ணப்பன் இல்லை அவர் ஆடு மேய்க்கிறார் என்றும், பின்னர் ஒழுங்காக வேலை செய்யுங்கள் இல்லை செருப்பால அடிப்பேன் என்று ஆபாசமாக பேசியதால் பெண் ஊழியர்கள் உட்பட அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.

 

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக உள்ள நிலையில் பெயர் பாஸ்கரன் என்பதால் இவர் அதிமுக நகர செயலாளர் சங்கரபாண்டியன் சகோதரர் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக முதலில் போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon