மீரா மிதுனுக்கு கால்ஷீட் வீணாகிறதாம்..!
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர்கள் அபிஷேக் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிணை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீராமிதுன். தொடர்ந்து இணையதளம் மூலம் பேசி வரும் மீராமிதுன் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கேரளாவில் தலைமறைவாக இருந்த கிராமத்தில் கடந்த 14ஆம் நாள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை மீரா மற்றும் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிணை கோரி விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
அதில் பல படங்களில் நடித்தவர் பல படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது எனவும் இதனால் தனக்கு பிணை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.







