தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை..!
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் நீலகிரி, கோவை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






