குழந்தைகளின் உடலில் பாம்பின் டிஎன்ஏ – 2 குழந்தையை கொன்ற தந்தை..!
தனது குழந்தைகளின் உடலில் பாம்புகளின் டிஎன்ஏ உள்ளது என்ற மூடநம்பிக்கையால் தனது 2 குழந்தைகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான் வழிபாடு கொள்கை, இலுமினாட்டி போன்ற பழங்கால ரகசிய சதி முறைகளில் நம்பிக்கை கொண்டவர் என கூறப்படுகிறது. தனது மனைவியிடம் பாம்பு டிஎன்ஏ உள்ளதாகவும் அது தனது இரண்டு குழந்தைகளுக்கும் கிடைத்து அவர்கள் அசுரர்களாக மாறி உலகை அழித்து விடுவார்கள் எனவும், தமக்கு ஞான ஒளி கிடைத்ததால் தனது இரண்டு வயது மற்றும் 10 மாத குழந்தையை மெக்சிகோவில் கொண்டு சென்று கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை அவர் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறியதை நம்பாத மனைவி அளித்த புகாரில் செல்போன் வாயிலாக அவரை கண்டுபிடித்த அதிகாரிகள் மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா திரும்பும்போது கைது செய்தனர்.







