கொள்ளையடிக்க முயன்று ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கி கொண்ட திருடன்..!
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கி கொண்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பனையபுரம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் ஒருவர் சிக்கிக் கொண்டதாக தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பந்தபட்ட ஏடிஎம் மையத்திற்கு சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் எந்திரத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
அவரை மீட்டு விசாரணை நடத்தியபோது அந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மோகனூர் அருகே உள்ள கோழிப் பண்ணையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்ற போது அங்கு ஆட்கள் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த போது ஏடிஎம் எந்திரத்தில் சிக்கி கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்த போலீசார் அவருடைய நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






