--- --:--:-- --

தவறான உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்..!

5

நாகை அருகே தனது தவறான உறவுக்கு இடையூறாக இருப்பதாக பெற்ற குழந்தையை கொன்றுவிட்டு உடல் நலம் குன்றி இறந்ததாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். மேலவாஞ்சூர் சேர்ந்த அபர்ணா என்ற பெண்ணின் கணவர் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார் அபர்ணா.

 

தாமரைக் குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் தவறான தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட அபர்ணா தனி வீடு எடுத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த 26ஆம் தேதி இரவில் தனிமையில் இருக்கும்பொழுது குழந்தை அழுதுள்ளது.

 

ஆத்திரத்தில் சுரேஷ் குழந்தையை தாக்க மேலும் வீறிட்டு அழுது உள்ளது. இதனையடுத்து குழந்தையின் கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கி கொன்று அவசர அவசரமாக குழந்தையை அடக்கம் செய்ய முயன்றுள்ளார்.

 

அக்கம்பக்கத்தினர் கணவருக்கு தகவல் கொடுத்ததை அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் தாய், சுரேஷ் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon