எழுத்துப் பிழையுடன் எதிர்க்கட்சி தலைவர் ஏந்தியிருந்த பதாகை வைரல்..!
திமுக அரசை எதிர்த்து எழுத்துப் பிழையுடன் எதிர்க்கட்சி தலைவர் ஏந்தியிருந்த பதாகை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலத்தில் நடைபெற்ற அந்த கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது கூடியிருந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் கையில் திமுக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி வந்தனர்.
அப்போது அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவர் பதாகையை ஏந்தியபடி கோஷமிட கூட இருந்தவர்களும் உடன் கோஷமிட்டனர்.
அதில் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும் அதனை சந்திக்க தயார் என்றும் தற்போது அரசு கடன் சுமையில் இருப்பதற்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் எனக் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவரான நான் திமுக அரசின் குறைகளை கூறுவதால் தான் இந்த அரசு சிறப்பாக ஆட்சி நடத்தும் என கோஷமிட்டனர்.
இதனிடையே அவர் ஏற்றியிருந்த பதாகையில் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று வாசகங்கள் இடம் பெறுவதற்கு பதில் நீட் தேர்வை ரத்து செய்ரேன் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த எழுத்துப் பிழையுடன் அவரின் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
இதனிடையே ஒரு முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு இந்தப் பிழை கூட தெரியவில்லை என சமூக வலைதளங்களில் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






