நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளானதில் வெளியாகியுள்ள புதிய தகவல்..!
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி உயிரிழந்த சம்பவத்தில் அதிவேகப் பயணம் தான் விபத்திற்கு காரணம் என முதல் தகவல் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து யாஷிகாவின் ஆண் நண்பர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் அவருடைய தோழி ஒருவர் மற்றும் ஆண் நண்பர்கள் இருவர் சனிக்கிழமையன்று யாஷிகாவின் காரில் பயணம் செய்த போது அந்த கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் யாஷிகாவின் பெண் தோழி உயிரிழந்தார்.
யாஷிகாவின் தோழி தான் விபத்திற்கு காரணம் என பரப்பப்படும் தகவலில் உண்மை இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஷிகாவின் தோழி காரின் சன் புருஃபை திறந்து பயணித்ததாக கூறப்படுவது தவறு என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.






