சாமி கனவில் வந்ததாகக் கூறி தையல் நிறுவனத்தை கொளுத்திய சம்பவம்..!
சாமி கனவில் வந்ததாகக் கூறி உடலில் சந்தனம் மஞ்சள் பூசி கையில் அரிவாளு டன் சென்று ஆசாமி ஒருவர் தையல் நிறுவனத்தை கொளுத்திய சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது.
பூவரசு கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் தங்கள் நிறுவனம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழனிசாமி என்பவர் உடல் முழுவதும் மஞ்சள் மற்றும் சந்தனத்தைப் பூசிக் கொண்டு கையில் அரிவாளை எடுத்து சென்று நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை தீயிட்டு எரித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பகுதியில் இருந்த பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




