--- --:--:-- --

சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாக வாய்ப்பு..!

4

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாக உள்ளது. அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி, சூரி கூட்டணியில் விடுதலை என்கிற திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

 

நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் அந்த படத்திற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கியுள்ளன.

 

ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு இயக்கப்படும் இந்த படத்தின் தலைப்பு கொண்ட முதல் பார்வை மாலை 5.30 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon