நீட் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா நடக்காதா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி..!
நீட் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா நடக்காதா என்ற செய்தியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி திமுக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றுவதற்காக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து இருந்ததாக குற்றம் சாட்டினார்.
இப்போது குழு அமைத்து காலம் தாழ்த்துவது ஏமாற்று வேலை என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார் மாணவர்கள் குழப்பத்தில் இருப்பதால் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்படுமா நடக்காதா என்பதை திட்டவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை தொடர்ந்து அது என்ன ஆனது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





