தடுப்பூசி போட்டவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறதா..?
தடுப்பூசி போட்டவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. கொரொனாவுக்காக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் இளைஞர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.
மேலும் சுகாதார பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஒரு பிரிவினர் இடையே பல்வேறு மூடநம்பிக்கைகள் மற்றும் பொதுத் தகவல்கள் பரவி கிடப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் தெரிவித்தன.
இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில் தற்போதுள்ள எந்த தடுப்பு மருந்தும் மலட்டு தன்மையை ஏற்படுத்தாது என்றும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் மீது பரிசோதித்து பக்கவிளைவுகள் இல்லை என்று உறுதியான பின்னரே அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.






