தமிழகத்தில் குறைந்தது கொரோனா பாதிப்பு: 14,016 பேருக்கு தொற்று உறுதி.. 267 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 53 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 25.895 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 74 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா இன்று 935 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 1,895 பேரும், ஈரோட்டில் 1,323 பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.






