--- --:--:-- --

தடுப்பூசியின் இரண்டு  டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை நீட்டித்தால் அபாயம்..!

1

கொரொனா தடுப்பூசியின் இரண்டு  டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை நீட்டித்தால் தற்போது பரவும் மரபணு மாற்ற வைரஸால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகரான டாக்டர் அந்தோணி எச்சரித்துள்ளார்.

 

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார். பிரிட்டனில் இப்படி இடைவெளியை அதிகரித்ததால் பலருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார். அதேநேரம் தடுப்பூசி தட்டுப்பாடாக இருந்தால் இடைவெளியை நீட்டிப்பது பற்றி பரிசீலிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

 

கடந்த மாதம் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இடைவெளியில் 6 முதல் 8 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்களாக மத்திய அரசு அதிகரித்தது .அதற்கு முன்னர் மார்ச் மாதம் இந்த இடைவெளியில் 28 நாட்களில் இருந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon